சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 23 ராணுவ வீரர்கள் -வெள்ளப்பெருக்கு வைரல் வீடியோ





அட்மின் மீடியா

0

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால் பல அணைகள் நிரம்பி வழிந்துள்ளது அதில் 20 அடி உயரத்துக்கு கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தால் குடியிருப்புவாசிகள் பலர் அச்சமடைந்துள்ளார்கள் மேலும் 

சிக்கிம் மாநில டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

சிக்கிமில் உள்ள லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து  1:30 மணிக்கு திடீர் வெள்ளம் தொடங்கியுள்ளது,அத்துடன் வெள்ளப்பெருக்கால் NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியது.

நீர்மட்டம் திடீரென 15-20 அடி உயரத்திற்கு கீழ்நோக்கி அதிகரித்தது. இதனால் சிங்டம் அருகே பர்டாங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் அடித்துசெல்லப்ப்ட்டுள்ளது, அதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள் எனவும் 23 பேர் மாயமாகி உள்ளார்கள் என தகவலகள் வெளியாகி உள்ளது

இது குறித்து குவாஹாட்டி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

சிக்கிம் வெள்ள பெருக்கு வீடியோ:-

https://twitter.com/drkafeelkhan/status/1709435370197106837

https://twitter.com/SahilKh83593460/status/1709553696281956632