தரங்கம்பாடி அருகே வெடி தயாரிக்கும் போது விபத்து 4 பேர் உடல் சிதறி பலி

அட்மின் மீடியா

0

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் இவர் அரசு அனுமதி பெற்று பட்டாசு வானவேடிக்கை வெடிகளை தயார் செய்து வருகிறார். 

தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார் இந்நிலையில் இன்று மதியம் 3 மணி அளவில் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறை சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும்  தீயணைப்பு துறையினர் வெடி விபத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இவ்விபத்தில் காயமடைந்து 4 நபர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

பட்டாசு கடையில் இன்று மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட 

இந்நிலையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறை சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.