8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்





அட்மின் மீடியா

0

திருப்பத்தூர்மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 31.10.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

பதவியின் பெயர்:- அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்:- 11 இடங்கள்

மாத ஊதியம்:-  ரூ. 15700 – 58,100 

வயது வரம்பு:-

01.07.2023 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:-

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

31.10.2023 மாலை 5.45 மணி வரை

நிபந்தனைகள் :-

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். 

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். 

3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (104 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

5. தகுதியில்லாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் 

6. காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் 

7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு 

8. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம்(E-பிளாக்) மாவட்ட ஆட்சியரகம் திருப்பத்தூர்-635601 என்ற முகவரிக்கு 31.10.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். 

நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். 

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான https://www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/09/2023093062.pdf