காதலனுடன் முக்கொம்பு பூங்காவிற்க்கு வந்த 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 4 போலீசார் கைது முழு விவரம்





அட்மின் மீடியா

0

காதலனுடன் முக்கொம்பு பூங்காவிற்க்கு வந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 4 போலீசார் கைது முழு விவரம்

திருச்சி அருகே, முக்கொம்பு அணை பூங்காவுக்கு வந்த காதல் ஜோடியை மிரட்டி 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, எஸ்.எஸ்.ஐ., உட்பட நான்கு போலீசார் போக்சோ சட்டத்தில் கைது 

திருச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக முக்கொம்பு சுற்றுலா மையம் விளங்குகிறது. திருச்சி மாவட்டம் ஜீயாபுரம் அடுத்து அமைந்துள்ளது இந்த முக்கொம்பு சுற்றுலா தளம் இங்கு  பூங்காவும் உள்ளது பலரும் சுற்றுலா வந்து செல்வது வழக்கம்.

திருவெறும்பூர் அருகே உள்ள கண்ணாங்குடியை சேர்ந்த இளைஞரும் துவாக் குடியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு இந்த காதல் ஜோடி சுற்றுலா தளங்களில் ஒன்றான திருச்சி முக்கொம்பு பகுதிக்கு சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு முக்கொம்பு கரைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்

அப்போது அங்கு திருவெறும்பூர் சரக தனிப்படை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சசிகுமார், நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சங்கரபாண்டி, நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத், துவாக்குடி போலீஸ்காரர் சித்தார்த், 

அவர்கள் கரைப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர்.

தனியே பேசிகொண்டு இருந்ததை கணட  காவலர்கள் 4 பேரும் காதலர்கள் இருவரையும் அழைத்து விசாரணை செய்துள்ளனர். பின்னர் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு காதலனை தனியாக அழைத்து விசாரித்துவிட்டு, அந்த சிறுமியை தாங்கள் வந்த காருக்குள் அழைத்து விசாரணை என்ற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி முக்கொம்பு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க கூறியதின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் மாணவி தனக்கு நேர்ந்த அவலத்தை புகாராக வழங்கினார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். உடனடியாக 4 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.