அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையில் நடந்தது இல்லை எனவும் அது கம்பூட்டர் கிராபிக்ஸ் வீடியோ என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் ஆக்டோபஸ் ஒன்று வாகனம் நிறுத்துமிடத்தில் ஊர்ந்து சென்று காரின் மேற்கூரையை இடிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடக தளத்தில் கத்தாரில் நடந்ததாக தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது..
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கிராபிக்ஸ் அனிமேஷன் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்
அந்த வீடியோவில் கத்தாரில் கடலில் இருந்து அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் ஆக்டோபஸ் ஒரு வெள்ளை SUV மீது ஏறி அதன் கூரையை நசுக்குகின்றது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் காரின் லைசென்ஸ் பிளேட்டில் கத்தாரில் வழக்கமான வாகனப் பதிவு எண் வடிவமைப்பிற்குப் பதிலாக @ghost3dee என்று குறிப்பிடப்பட்டருந்தது
அந்த இன்ஸடாகிராம் ஜடி சென்று பார்த்தால் கம்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தி அது போல் பல நூறு வீடியோக்களை தயாரித்து அதில் பதிவிட்டுள்ளார்
அவர் பெயர் அலெக்ஸ் இசட் அவர் ஒரு சிஜி ஜெனரலிஸ்ட்” என்று தன்னை விவரிக்கிறார்,
அவரது பயோ பிரிவில், ஹூடினி, மேக்ஸ், இசட்பிரஷ் மற்றும் பொருள் போன்ற பல அனிமேஷன் கருவிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
மேலும் பலரும் ஷேர் அதே வீடியோவை அவர் கடந்த செப்டம்பர் 25, 2023 அன்று தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்