அட்மின் மீடியா
0
பெண்கள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு மகளிர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக துவங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (osc) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர்/ஓட்டுநர் பதவிக்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண்.35,36 தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வரும் 15.10.2023 மாலை 5.30 பி.ப மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்பட வேண்டும் எனவும், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப.,அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
பணி விவரம்:-
மைய நிர்வாகி
மூத்த ஆலோசகர்
தகவல் தொழில்நுட்ப பணியாளர்
களப்பணியாளர்
பல்நோக்கு உதவியாளர்
பாதுகாவலர் /
ஓட்டுநர்
கல்வி தகுதி:-
மைய நிர்வாகி பணிக்கு
சோஷியல் ஒர்க் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்,
உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் தொடர்பான அழைப்பு உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராக வேண்டும்.
பண்முக உதவியாளார் பணிக்கு
10 ம் வகுப்பு தேர்ச்சி/ அல்லது தோல்வி
திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
சமையல் தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:-
மைய நிர்வாகி பணிக்கு மாதம் – ரூ.30,000/-
மூத்த அலோசகர் பணிக்கு மாதம் – ரூ.20,000/-
தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு மாதம் ரூ.18,000/-
களப்பணியாளர் பணிக்கு மாதம் – ரூ.15,000/-
பல்நோக்கு உதவியாளர் பணிக்கு மாதம் – ரூ.6,400/-
பாதுகாவலர் / ஓட்டுநர் பணிக்கு மாதம் – ரூ.ரூ.10,000/-
வயது வரம்பு:-
40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:-
கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து டவுன் லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
தபால் முகவரி:-
சமூகநல அலுவலர்,
அறை எண்,35,36 தரை தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
15/10/2023
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/10/2023100384.pdf