ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி பலி – நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம் – ஷவர்மா தயாரிக்க தடை விதிப்பு! Girl Dies After Eating Shawarma

Full Time
  • Full Time
  • Anywhere


Sept 18, 2023


அட்மின் மீடியா

0

ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி பலி – நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம் – ஷவர்மா தயாரிக்க தடை விதிப்பு!

ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜாதா குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் பரமத்தி சாலையில் உள்ள  உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் சிறுமி கலையரசி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 4 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளார்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 

உணவகத்தில் சாப்பிட்டவர்கள் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர். 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். என கூறினார் 

மேலும் அன்றையதினம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 10 பேருக்கு இதே உணவகத்தில் ட்ரீட் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கும் இன்று காலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் என உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம் அப்போது, அந்த உணவகத்தில் கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஷவர்மா செய்வதற்கான இயந்திரமும் அசுத்தமாக இருந்துள்ளது உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

மேலும் அங்கிருந்து உணவுப் பொருட்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக ஷவர்மா விற்படை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உணவக உரிமையாளர் நவீன் குமார் மற்றும் அந்த கடையில் பணிபுரிந்த  இருவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரப்படுகின்றது