TTF வாசனனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை

Full Time
  • Full Time
  • Anywhere


Sept 18, 2023


அட்மின் மீடியா

0

  • TTF வாசனனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை
  • யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை
  • மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு

டிடிஎப் வாசன் அவருக்கு சொந்தமான சுஸுகி ஹயபுசா Suzuki Hayabusa என்ற தனது இரு சக்கர வாகனம் மூலமாக பைக்கில் நேற்று சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது அதில் அவருக்கு கை எலும்பு உடைந்ததாக தெரிகின்றது

இந்நிலையில், அவர் மீது பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள் , அதில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனத்தை இயக்கியது. சாலை விதிகளை மீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் டிடிஎப்.வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில், சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் வாசனுக்கு கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் படு காயம் – வைரல் வீடியோ ttf vasan accident பார்க்க:-

https://www.adminmedia.in/2023/09/ttf-vasan-accident.html

இந்நிலையில் TTF வாசனனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது